/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
/
மூணாறில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
மூணாறில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
மூணாறில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 25, 2025 05:28 AM
மூணாறு : மூணாறு நகரில் ஆற்றோரம் உள்ள 50 க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்ததாக தெரியவந்தது.
மூணாறு நகரில் மார்க்கெட் பகுதியில் கடைகள் வைத்துள்ள பழக்கடைகளை சார்ந்தவர்களுக்கும், சில வர்த்தக ஸ்தாபனங்களின் உரிமையாளர்களுக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கேரள உயர் நீதி மன்றத்தை அணுகினர். அது தொடர்பாக நகரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவிகுளம் சப் கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் ஆவணங்களை சரிபார்த்து விதிமுறைகள் மீறி கட்டுமானங்கள் இருக்கும் பட்சத்தில் நான்கு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு 2024 ஏப்.12ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை செயல்படுத்தாததால், நீதிமன்றம் உத்தரவை மீறியதாக சப் கலெக்டருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனையடுத்து சப் கலெக்டர் ஆர்யாவின் உத்தரவுபடி வருவாய் துறையினர் நகரில் ஆற்றோரம் உள்ள வர்த்தக நிறுவனங்களின் நிலம், உரிமை உட்பட அனைத்து ஆவணங்களையும் செப்.1 முதல் செப்.3 க்குள் நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளித்தனர்.
முதல்கட்டமாக 29 வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக தெரியவந்த நிலையில், நகரில் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்ள வர்த்தகர்கள் தயாராகி வருகின்றனர்.