/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக்கில் நிருபர் என கூறி பணம் கேட்டு மிரட்டிய மூவர் மீது வழக்கு

ADDED : ஆக 25, 2025 05:28 AM
தேனி : ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடையில் பணியாளர் குருசாமியிடம், நிருபர் என கூறி பணம் கேட்டு மிரட்டி, கொலைமிரட்டல் விடுத்த விஜயலிங்கராஜா, ஹரிஹரன், ஜெகதீசன் மீது கண்டமனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கண்டமனுார் புதுக்காலனி குருசாமி. இவர் ஜி.உசிலம்பட்டி டாஸ்மாக்கடையில் பணிபுரிகிறார். டாஸ்மாக் கடைக்கு சென்ற விஜயலிங்கராஜா, ஹரிஹரன், ஜெகதீசன் ஆகியோர் நிருபர் என கூறி மது வாங்கி அருந்தினர்.
தொடர்ந்து பணம் வழங்க வேண்டும் என மிரட்டினர். வாரத்திற்கு இருமுறை பணம் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என குருசாமி கூறினார்.
அப்போது நிருபர் என கூறிய மூவரும் குருசாமியை தாக்கி, கற்களால் எறிந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை ஜெகதீசன் அலைபேசியில் வீடியோ எடுத்தார். டாஸ்மாக் பணியாளர் குருசாமி புகாரில் விஜயலிங்கராஜா, ஹரிஹரன், ஜெகதீசன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.