/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
13 வயது சிறுவனுக்கு தொந்தரவு; தொழிலாளி கைது
/
13 வயது சிறுவனுக்கு தொந்தரவு; தொழிலாளி கைது
ADDED : ஆக 29, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர், ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து, 50; தனியார் சிலிண்டர் கம்பெனியில், சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். ஆக., 26ல் கீழவாசல் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், 13 வயது சிறுவனை தாக்கி, புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவன், பெற்றோரிடம், கூறி அழுதுள்ளார். பெற்றோர் புகாரில், தஞ்சாவூர் போலீசார், சவரிமுத்துவை, நேற்று, போக்சோவில் கைது செய்தனர்.