/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு
/
ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு
ADDED : ஆக 29, 2025 05:44 AM
தஞ்சாவூர்: பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் அருகே கண்டியூரில், 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணி நடைபெற்று வருகிறது.
கோவிலின் சுற்றுச்சுவர் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பலர் வீடு, கடைகளை கட்டி ஆக்கிரமித்திருந்தனர். அறநிலையத்துறை சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை ஏழு கட்டங்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8வது கட்டமாக எட்டு வீடுகள், ஒரு கடை ஆகியவை அகற்றப்பட்டு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடம் நேற்று மீட்கப்பட்டது.