ADDED : டிச 24, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யு., சார்பில் தொழிலாளர் சட்டத்திருத்தத்தைக் கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சேதுராமன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உமாநாத், அய்யம்பாண்டி, முருகன், தெட்சிணாமூர்த்தி, விஜயகுமார், தெய்வீரபாண்டியன், வேங்கையா, முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், அரசுத் துறைகளில் தனியார் மயமாக்கலைத் தடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கலை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட 60 ஆண்கள், 49 பெண்கள் உள்ளிட்ட சி.ஐ.டி.யு., உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர்.

