/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளாக்குளத்தில் கருகியது நெற்பயிர் இன்சூரன்ஸ் எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
விளாக்குளத்தில் கருகியது நெற்பயிர் இன்சூரன்ஸ் எதிர்பார்க்கும் விவசாயிகள்
விளாக்குளத்தில் கருகியது நெற்பயிர் இன்சூரன்ஸ் எதிர்பார்க்கும் விவசாயிகள்
விளாக்குளத்தில் கருகியது நெற்பயிர் இன்சூரன்ஸ் எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : டிச 24, 2025 05:38 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே விளாக்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு உணவாகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட கே. கே.,பள்ளம் குரூப்பில் உள்ள விளாக்குளம், பீக்குளம், பெரிய வெட்டு கண்மாய், சேத்தநேந்தல், இலந்தைக்குளம், உடப்பங்குளம், வீரப்பனிக்கான் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதி கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டதை தொடர்ந்து நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையுடன் கருகிய நெற்பயிர்களை கால்நடைகளுக்கு உணவாக்கி வருகின்றனர். விளாக்குளம் விவசாயி கருப்புச்சாமி: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் கண்மாயில் இருந்த சிறிதளவு தண்ணீரை நம்பி நெல் விவசாயத்தை ஆரம்பித்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் கண்மாய்கள் வறண்டு விட்டதால் நெற்பயிர்களும் கருகி விட்டது.
ஒரு ஏக்கருக்கு ரூ.20ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் நெற்பயிர்கள் கருகிவிட்டதால் கே.கே.பள்ளம் குரூப்பில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளுக்கும் முழு அளவில் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

