/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தீவிரம்
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தீவிரம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தீவிரம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 07, 2025 03:09 AM

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் திட்டத்தின் கீழ் படிக் கட்டுகள் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி இரவு பகலாக துரிதமாக நடந்து வருகிறது.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள 1200க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
பழமையான ரயில்வே ஸ்டேஷனான, காரைக் குடி ரயில்வே ஸ்டேஷனில் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல் கின்றன. இங்கு, அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.13.57 கோடிசெலவில் 2023ம் ஆண்டு புதுப்பிப்பு பணி தொடங்கப்பட்டது.
நகரும் படிக்கட்டுகளான எஸ்கலேட்டர் லிப்ட், பார்க்கிங், அதிகளவிலான மின்விளக்கு, ரயில்வே ஸ்டேஷனின் இரு நுழைவு வாயிலிலும் ஆர்ச்கள், பயணிகள் அமர்வதற்கு கூடுதல் இடம், டிஜிட்டல் போர்டுகள், கண்காணிப்பு கேமராக்கள் பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகளுடன் தயாராகி வருகிறது. பணிகள் 2024 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும், என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை பணிகள் முழுமையாக முடியவில்லை.
எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தொடங்கப் படாமல் இருந்த நிலையில் தற்போது இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. தவிர மழைக்காலங்களில் நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கி கிடக்கும் நிலையில் தண்ணீரை வெளியேற்ற ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் வரத்து கால்வாய்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற, திட்டப் பணிகள் பல முடிவடைந்துள்ளது. பயணி களின் வசதிக்காக தற்போது நுழைவு வாயில் அருகில் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
படிக்கட்டு அமைக்கும் பணியை தொடர்ந்து எஸ்கலேட்டர் அமைக்கும் பணி நடைபெறும். இம்மாத இறுதிக்குள் அம்ரித் திட்ட பணி முடிந்து திறப்பு விழா நடைபெற உள்ளது என்றார்.