நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயராமன், அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் பாரத் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், சுரேஷ்குமார், மகரஜோதி, சக்திவேல், சுதிச்சந்திரன், ஜெயமணி, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முத்து பஞ்சவர்ணம், பொறுப்பாசிரியர் பாண்டிசெல்வி கலந்துகொண்டனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் சொக்க லிங்கம் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆனந்தா கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பரிசுகளை வழங்கினார்.