/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
நண்பரிடம் ரூ.28.90 லட்சம் பெற்று தலைமறைவான வாலிபருக்கு வலை
/
நண்பரிடம் ரூ.28.90 லட்சம் பெற்று தலைமறைவான வாலிபருக்கு வலை
நண்பரிடம் ரூ.28.90 லட்சம் பெற்று தலைமறைவான வாலிபருக்கு வலை
நண்பரிடம் ரூ.28.90 லட்சம் பெற்று தலைமறைவான வாலிபருக்கு வலை
ADDED : செப் 03, 2025 02:40 AM
வேலுார்:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்த வாலிபர் யுவராஜ், 23. இவருக்கும், வேலுார் அஞ்சுமன் தெருவை சேர்ந்த கிசார் உசேன், 30, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பங்கு சந்தையில் ஈடுபட்டு வந்த யுவராஜ், கிசார் உசேனிடம், தான் பங்கு சந்தையில் ஈடுபட்டு, அதிக லாபம் ஈட்டி வருவதாகவும், தொழில் முதலீட்டுக்காக பணம் தருமாறும், அதற்கு வட்டி தருவதாகவும் கூறினார்.
அவ்வளவு தொகை வழங்க முடியாமல் இருப்பதாக கூறிய கிசார் உசேனிடம், தானே வங்கியில், உன் பெயரில் கடன் பெற்று தருவதாகவும், மாதந்தோறும் வட்ட கொடுத்து விடுகிறேன், அதை வைத்து, 5 ஆண்டுகளில் கடன் தொகையை அடைத்து விட முடியும் என கூறினார்.
இதை நம்பி, வங்கியில், 28.90 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, யுவராஜிற்கு கொடுத்தார். பின், ஏப்., ஒரு மாதம் மட்டும் வட்டி தந்துவிட்டு, யுவராஜ் தலைமறைவானார். கிசார் உசேன், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில், யுவராஜ் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.