/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஏரியில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
/
ஏரியில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஏரியில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஏரியில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : செப் 03, 2025 01:34 AM
சோளிங்கர்:சோளிங்கர் அருகே ஏரியில் குளித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் மகன் இளஞ்செழியன், 10, விஜயகாந்த் மகன் அமுதன், 10; இருவரும் 5ம் வகுப்பு படிக்கின்றனர்.
அமுதன் தம்பியான மூன்றாம் வகுப்பு படிக்கும் சுதன், 8. இவர்கள் மூவரும், அக்கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ., அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியில் படித்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து, மூவரும் வீடு திரும்பாததால், பெற்றோர் தேடினர். ஏரிக்கரையில் அவர்கள் அணிந்திருந்த உடை இருந்தது. சந்தேகமடைந்து, சோளிங்கர் தீயணைப்பு துறையினர், கொண்டாபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் தேடியபோது, சிறுவர்கள் மூவரையும் இறந்த நிலையில் மீட்டனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது, ஏரியில் இறங்கி குளித்த சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கொண்டபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.