/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 'ஆட்டை'
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 'ஆட்டை'
ADDED : செப் 03, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ஐ.டி., ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் நகை திருடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் கணேஷ், 35. சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
விடுமுறையில் வாலாஜா வந்தவர், குடும்பத்துடன், உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்னை சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார்.
அப்போது, அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 19 சவரன் நகை மற்றும், 10,000 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.