/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள மழைநீர்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள மழைநீர்
ADDED : டிச 24, 2025 05:26 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளையில் அங்கன்வாடி மையக் கட்டடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கியதால் செயல்படாமல் முடங்கியது.
மண்டபம் வேதாளை குஞ்சார்வலசை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு செயல்முறை பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் டிச.,29, 30ல் பெய்த கனமழையால் இந்த மையத்தின் கட்டடத்தை சுற்றிலும் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உருவாகி குழந்தைகளை கடித்து மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. தண்ணீரை கடந்து வரும் குழந்தைகளுக்கு ஜலதோஷம், இருமல் பரவக் கூடும். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்ததால், கடந்த சில நாட்களாக அங்கன்வாடி மையம் செயல் படாமல் முடங்கியது. எனவே இக்கட்டத்தை சுற்றியுள்ள மழை நீரை வெளியேற்றி, குழந்தைகள் சென்றுவர நிரந்தர பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

