/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கழிப்பறைகள் புதுப்பிப்பு வருமான வரித்துறை ஏற்பாடு

ADDED : டிச 24, 2025 05:26 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற் கரையில் பயன்பாடின்றி மாறிய கழிப்பறைகளை வருமான வரித்துறை யினர் புதுப்பித்து நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் அமைத்த கழிப்பறை கூடம் பராமரிப்பின்றி சுகாதாரகேடாகி முடங்கியது. இதனால் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், சென்னை வருமான வரித்துறை இயக்குநரகம் சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தில் பயன்பாடின்றி கிடந்த 7 கழிப்பறை கட்டடங்களை புதுப்பித்தனர்.
இவற்றை நேற்று சென்னை வருமான வரித்துறை இயக்கு நரக அதிகாரி மைக்கேல் ஜெரால்ட், ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் ஆண்ட வனிடம் கழிப்பறை கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினார்.
வருமான வரித்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, வருமான வரித்துறை அதிகாரி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்ற னர்.