/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி
/
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி
ADDED : ஆக 25, 2025 01:47 AM
புதுக்கோட்டை,: விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன், மின் கம்பத்தை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகில் ஏனாதியைச் சேர்ந்த விவசாயி பிரபு மகன் செல்வகண்ணன், 13. இவர், அறந்தாங்கி அருகே சிலட்டூரில் உள்ள தன் தாத்தா வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார்.
அப்பகுதியில், நேற்று காலை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த செல்வகண்ணன் அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அறந்தாங்கி போலீசார் விசாரிக்கின்றனர்.