/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் கைது
ADDED : ஆக 23, 2025 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பு துக்கோட்டை மாவட்டம், குன்னத்துார் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கணித ஆசிரியர் வில்லியம் பால்ராஜ், 51. திருச்சியை சேர்ந்த இவர், பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி புகாரில், பள்ளி நிர்வாகத்தினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் அளித்தனர். விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், கீரனுார் மகளிர் போலீசில் புகார் அளித்தா ர்.
போலீசார் போக்சோவில் வில்லியம் பால்ராஜை கைது செய்தனர்.