/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
தாயை அடித்துக் கொன்ற மகன், கணவனுக்கு 'கம்பி'
/
தாயை அடித்துக் கொன்ற மகன், கணவனுக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 22, 2025 12:36 AM
ஆலம்பாடி; தாயை அடித்து கொலை செய்த மகனையும், உடந்தையாக இருந்த தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பரமஜோதி, 69, கலைச்செல்வி, 65. தம்பதியின் மகன் சிவசங்கர், 26; சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், ஜூலை, 19ல் சொந்த ஊருக்கு வந்தார். புதிய வாகனம் வாங்க போவதாக, தாயிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சிவசங்கர், தாயை அடித்து, அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். பின், பரமஜோதி, சிவசங்கர் சேர்ந்து, கலைச்செல்வி துாக்கிட்டு இறந்ததாக நாடகமாடினர்.
கலைச்செல்வி சாவில் சந்தேகம் ஏற்பட்டதால், செஞ்சேரி போலீசார், கலைச்செல்வி சடலத்தை பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில், கலைச்செல்வி கழுத்து முறிவு ஏற்பட்டு இறந்திருப்பது தெரிந்தது.
கொலை வழக்கு பதிந்த போலீசார், சிவசங்கரையும், உடந்தையாக இருந்த பரமஜோதியையும் கைது செய்தனர்.