/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தர்ணா
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தர்ணா
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தர்ணா
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தர்ணா
ADDED : ஆக 05, 2025 05:51 AM

பெரம்பலுார்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில், 73 வயது மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.
பெரம்பலுார் மாவட்டம், நன்னை கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள், 73. இவர், நன்னை கிராமத்தில் இருந்த பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று தரையில் அமர்ந்தும், வராண்டாவில் படுத்தும் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, சம்பந்தப்பட்ட ஏரியின் வரைபடம், நீதிமன்ற உத்தரவு நகல், 'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்களில் வெளி வந்த ஆக்கிரமிப்பு செய்தி உள்ளிட்ட ஆவணங்களை கையில் வைத்திருந்தார். அதிகாரிகள் மற்றும் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
நல்லம்மாள் கூறுகையில், ''நன்னை கிராமத்தில் மூன்று ஏரி இருந்தது. இதை நன்னை கிராமத்தை சேர்ந்த இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், இரண்டு ஆசிரியர்கள், ஐந்து அரசு ஊழியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி, பயன்படுத்தி வருகின்றனர்.
''ஆக்கிரமிப்புகளை அகற்ற 2023ல் சென்னை உயர் நீதிமன்றம், அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
''ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து, போராட்டம் நடத்துவதால், எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.