/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது
/
செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது
ADDED : ஜூலை 16, 2025 07:19 AM
பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
அப்போது கூட்டத்தில் நின்றிருந்த, ஆதனுாரைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர் பாண்டியன், 67, என்பவர், தன் காலில் போட்டிருந்த செருப்பை, காலால் உதறி பழனிசாமி மீது வீசினார். செருப்பு பழனிசாமி மீது படவில்லை. இதை கவனித்த போலீசார், செருப்பு வீசிய பாண்டியனை பிடித்து விசாரித்தனர். பின் வழக்கு பதிந்து பாண்டியனை கைது செய்தனர். செருப்பு வீசிய பாண்டியன் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.