/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விநாயகர் சிலை கரைக்க அனுமதி கேட்டு மனு
/
விநாயகர் சிலை கரைக்க அனுமதி கேட்டு மனு
ADDED : ஆக 30, 2025 01:26 AM
மோகனுார், பள்ளிப்பாளையம் பகுதி காவிரியில், நாளை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கேட்டு, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் சபரிநாதன் மற்றும் உறுப்பினர்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம் பகுதியில் ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி நாளில் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடத்தி, ஐந்தாவது நாளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். கடந்த, 15 ஆண்டுகளாக இந்ந நடைமுறையை கடைப்பிடித்து வருகிறோம். இந்நிலையில், நடப்பாண்டு பிரதிஷ்டை செய்துள்ள அனைத்து விநாயகர் சிலைகளையும், 3வது நாளில் (ஆக., 29ல்) எடுத்துச்சென்று கரைக்க வேண்டும் என, போலீசார் வற்புறுத்தி தொல்லை செய்கின்றனர். இதனால் விநாயகர் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வழக்கமாக பிரதிஷ்டை செய்து, 5ம் நாளான நாளை மாலை (ஆக்., 31ல்) விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.