/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஞானமணி கல்வி நிறுவன தலைவருக்கு விருது வழங்கல்
/
ஞானமணி கல்வி நிறுவன தலைவருக்கு விருது வழங்கல்
ADDED : ஆக 30, 2025 01:27 AM
ராசிபுரம், ஐ.சி.டி., அகாடமி சார்பில், 'அடுத்த தலைமுறைக்கான கல்வி' என்ற தலைப்பில் கோவையில் விழா நடந்தது. இதில், ஞானமணி கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணலுக்கு, அடுத்த தலைமுறை கல்வி பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது.
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விருது வழங்கி பாராட்டினார்.
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு கல்வி சூழலை வடிவமைத்ததற்காகவும், கல்வித்துறையில் தொலைநோக்கு தலைமைத்துவத்திற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற தலைவர் அரங்கண்ணலுக்கு, ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மாலாலீனா, துணை தாளாளர் மதுவந்தினி, முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் மாதேஸ்வரன், முதல்வர் சஞ்செய் காந்தி மற்றும் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.