/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தி வந்தவர் கைது
/
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தி வந்தவர் கைது
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தி வந்தவர் கைது
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தி வந்தவர் கைது
ADDED : ஆக 08, 2025 11:36 PM
மயிலாடுதுறை:சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து குழந்தையை கடத்தியவரை கைது செய்த ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்திற்கு ஜூலை 26ல், அம்மாநிலத்தை சேர்ந்த சோனு மானைப்பூரி என்ற பெண், தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக வந்தார். இரவு அவர்கள் ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கி உள்ளனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, சோனு மாணிக்பூரியின் 18 மாத ஆண் குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் நடத்திய விசாரணையில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், குழந்தையை துாக்கிச் சென்றது தெரிந்தது. தீவிரமாக விசாரித்த போது, கடத்திய நபர், தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனுாரை சேர்ந்தவர் என தெரிந்தது.
மயிலாடுதுறை ஆர்.பி.எப்., போலீசார் உதவியுடன், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 45, என்பவரை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு, கும்பகோணம் ரயில் நிலையத்தில், சோனு மாணிக் பூரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.