நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 28, பம்ப் பிட்டர். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த், 38, விவசாயி. இருவரும் நேற்று பைக்கில் வைத்தீஸ்வரன் கோவில் சென்றுவிட்டு திரும்பினர்.ஆனந்த் பைக்கை ஓட்டினார்.
புங்கனுார் ரயில்வே கேட்டை கடந்த போது பைக் நிலை தடுமாறி சாலையோரம் குப்பை கிடங்கு காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மோகன்ராஜ் உயிரிழந்தார். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.