/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பூம்புகாரில் இன்று மதியம் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு
/
பூம்புகாரில் இன்று மதியம் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு
பூம்புகாரில் இன்று மதியம் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு
பூம்புகாரில் இன்று மதியம் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு
ADDED : ஆக 10, 2025 07:05 PM

மயிலாடுதுறை:பூம்புகாரில் இன்று மதியம் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு- பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று மதியம் 3 மணிக்கு வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். நேற்று மாலை பூம்புகார் வந்த டாக்டர் ராமதாஸ் மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிடங்கல் கிராமத்திற்கு சென்று தங்கியுள்ளார்.
இன்று நடைபெறும் மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு, எல்லா சமுதாயங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.