/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு: கடைசி படம் 'ஜனநாயகனுக்கு' வரப்போகுது சோதனை
/
மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு: கடைசி படம் 'ஜனநாயகனுக்கு' வரப்போகுது சோதனை
மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு: கடைசி படம் 'ஜனநாயகனுக்கு' வரப்போகுது சோதனை
மதுரை மாநாட்டில் முதல்வரை 'கலாய்த்து' விஜய் பேச்சு: கடைசி படம் 'ஜனநாயகனுக்கு' வரப்போகுது சோதனை
ADDED : ஆக 24, 2025 04:20 AM
மதுரை: மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய், 'அங்கிள்' என வார்த்தைக்கு வார்த்தை கூறி கிண்டல் செய்யும் வகையில் பேசினார். அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்திலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசும் வசனங்கள் இடம் பெறலாம் என்பதால், படத்தை வெளியிட விநியோகஸ்தரர்கள், திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்குகின்றனர்.
சினிமாவில் தனக்கு இருக்கும் 'மாஸ்' காரணமாக 1993 முதல் செயல்பட்ட நற்பணி இயக்கத்தை 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என அரசியல் கட்சியாக விஜய் மாற்றினார். 'கடைசி படமாக ஜனநாயகன் இருக்கும். அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்' என அறிக்கையும் வெளியிட்டார். கடந்தாண்டு செப்.,ல் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். தன் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு கட்சியும் அவருடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.
இச்சூழலில் ஆக.,21ல் மதுரை பாரபத்தியில் 2வது மாநில மாநாட்டை நடத்தினார்.
அதில் விஜய், தி.மு.க., அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர் ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை 'அங்கிள், வாட் அங்கிள், ராங் அங்கிள்' எனக்கூறி 'கலாய்த்தார்'. இதற்கு பதிலடி தந்து விஜய்யை வளர்த்துவிட வேண்டாம் எனக்கருதி தி.மு.க., அமைதி காத்து வருகிறது.
வெளியாகுவதில் சிக்கல் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் 2026 ஜன.,9ல் வெளியாக உள்ளது. மொத்தம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பட 'புரமோஷன்' போஸ்டரில் தொண்டர்கள் பின்னணியில் விஜய் நிற்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியாகுவதால் அதில் தி.மு.க., அரசுக்கு எதிராக விஜய் 'பஞ்ச்' டயலாக் பேசலாம்.
முதல்வரையும், துணை முதல்வர் உதயநிதியையும் தாக்கி வசனங்கள் இடம்பெறலாம் என சினிமா விநியோகஸ்தரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதனால் படத்தை வெளியிட்டால் 2013ல் 'தலைவா' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல் இப்படத்திற்கும் ஏற்படும் எனக்கருதி ஜனநாயகன் படத்தை வாங்கலாமா, திரையிடலாமா என தயக்கம் காட்டி வருகின்றனர்.
'தலைவா'வுக்கு வந்த சோதனை அவர்கள் கூறியதாவது: 2013ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விஜய்யின் 'தலைவா' படம் வெளியாக நாள் குறிக்கப்பட்டது. விஜய்யை வளர்த்துவிட விரும்பவில்லை ஜெயலலிதா. 'டைட்டிலுக்காகவே' அப்படத்தை வெளியிட அனுமதி தராமல் அப்போதைய அ.தி.மு.க., அரசு தாமதித்தது. பலவகைகளிலும் நெருக்கடியும் கொடுத்தது.
இதனால் கோடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதாவை விஜய், தந்தை சந்திரசேகர் சந்திக்க முயன்றனர். பின் அ.தி.மு.க., அரசுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்து ஒருவழியாக படத்தை வெளியிட்டனர். ஆனாலும் திரையிட்ட தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இப்படி ஆரம்பம் முதலே 'தலைவா' படம் சிக்கலை சந்தித்தது.
அதுபோல் 'ஜனநாயகன்' படத்திற்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. படத்தின் வசனங்கள் மத்திய அரசின் சென்சார் போர்டு தணிக்கை செய்யும் என்பதால் பா.ஜ., அரசுக்கு எதிராக வசனங்கள் இருந்தால் அதை 'கட்' செய்யவும் வாய்ப்புள்ளது. இப்படி பல சிக்கல்களை கொண்ட இப்படத்தை வாங்குவதா, வேண்டாமா என இப்போதே குழப்பமாகவும், தயக்கமாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி னர்.