/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.501 கோடி என்னாச்சு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கேள்வி
/
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.501 கோடி என்னாச்சு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கேள்வி
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.501 கோடி என்னாச்சு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கேள்வி
கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.501 கோடி என்னாச்சு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கேள்வி
ADDED : ஆக 24, 2025 04:19 AM
மதுரை: 'ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.501 கோடி மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளுக்கான வாடகை, பணியாளர்கள் சம்பளம், சரக்குகளை இறக்கிச்செல்லும் லாரி வாடகை, மின் கட்டணம் போன்றவற்றுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் வழங்குகிறது.
ரேஷன் கடைகளின் 2021-- 2022க்கான வரவு செலவுகளை தணிக்கை செய்து அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தொகை ரூ.443 கோடியை அரசாணை 116 ன் கீழ் 2023 மார்ச்சில் முழு மானியத்தை அரசு வழங்கியது. இப்போதைய ரூ.501 கோடி மானியத்தை விடுவிக்க வேண்டும் என்கிறார் மாநிலப் பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி.
அவர் கூறியதாவது: 2021 -- 2022க்கான தணிக்கையில் ஏற்பட்டுள்ள நஷ்டத் தொகை ரூ.443 கோடியை அடிப்படையாக வைத்து, 2022 --2023, 2023-20 24 ஆண்டுக்கான வரவு செலவுகளை தணிக்கை செய்வதற்கு முன்பாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு தலா 50 சதவீதம் மானியம் என்று முன்கூட்டியே கணக்கிட்டு 2022 -- 2023ம் ஆண்டுக்கு ரூ.225 கோடி, 2023 -2024 க்கு ரூ.274 கோடி என ரூ.499 கோடியே வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாண்டுகளுக்கான ரேஷன் கடைகளின் உண்மையான வரவு செலவுகள் மாவட்ட அளவில் தணிக்கை (ரூ.1000 கோடி) செய்யப்பட்டுள்ளன. அதை அரசுக்கு அறிக்கை அனுப்பாமல் அந்தந்த மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நிலுவையில் வைத்துள்ளனர்.
வரவு செலவுக்கான தொகையை அரசு மானியமாக வழங்கினால் தான் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டமின்றி செயல்பட முடியும். அதிகாரிகளை உடனடியாக அறிக்கை அனுப்ப உத்தரவிடுவதுடன் நிதி நெருக்கடியின்றி அரசின் திட்டங்களை செயல்படுத்துவதுடன் பணியாளர்களுக்கான ஊதியம், பணப்பலன்களை வழங்குவதற்கும் ரூ.501 கோடியை மானியமாக அரசு வழங்க வேண்டும் என்றார்.