/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிற்சாலைக்கு காவிரி நீர் தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
தொழிற்சாலைக்கு காவிரி நீர் தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தொழிற்சாலைக்கு காவிரி நீர் தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தொழிற்சாலைக்கு காவிரி நீர் தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 24, 2025 04:20 AM
மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில தொழிற்சாலைகளுக்கு காவிரி நீர் வினியோகிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
விராலிமலை முகமது அப்பாஸ் தாக்கல் செய்த மனு: குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அரசாணைக்கு முரணாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில வணிக தொழிற்சாலைகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இச்சட்டவிரோத நடவடிக்கையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலைகளுக்கு நீர் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
தமிழக குடிநீர் வடிகால் வாரிய தரப்பு வழக்கறிஞர் சதீஷ்: வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நீர் வினியோக திட்டங்களிலிருந்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு இணைப்புகள் வழங்கும் நடைமுறைகளுக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. விதிமுறைகளுக்கு இணங்க, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில்துறை நோக்கங்களுக்காக நீர் வழங்கும் திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்றார்.
நீதிபதிகள், 'இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.