ADDED : செப் 07, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் விஜய்ஸ்ரீ துவக்கி வைத்தார். 'பேராசிரியர்களின் ஆற்றல், சேவைகள்' என்ற தலைப்பில் மாணவர்கள் கருத் தரங்கு நடத்தினர்.
'ஆசிரியர்களின் தியாகம்' என்ற தலைப்பில் மாணவர்கள் தயாரித்த காணொலி திரையிடப்பட்டது. பேராசிரியர்கள் ஸ்டெல்லா தங்கம், ஏஞ்சலின் ஜெபமேரி, வர்ண பிரியா, நர்மதாவுக்கு தாளாளர் பரிசு வழங்கி கவுரவித்தார். 4ம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.