/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் கால்வாய் விடுபட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு
/
கழிவுநீர் கால்வாய் விடுபட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் கால்வாய் விடுபட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் கால்வாய் விடுபட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 07, 2025 03:52 AM

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி மதுரை - திண்டுக்கல் சாலையோரம் வடிகால் கால்வாய் விடுபட்ட பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இச்சாலை சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டு இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை மூலம் வடிகால் கட்டப்பட்டது. திண்டுக்கல் சாலையில் ஓட்டல், கடைகள் துவங்கும் பகுதியில் துவங்கிய வடிகால் கட்டுமான பணி முழுமை பெறாமல் சரவணா நகர் பிரிவு முன்பாக நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதி ஓட்டல், டீக்கடைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குறிப்பிட்ட வடிகாலிற்கு உள்ளேயே வெளியேற வழியின்றி ஆண்டுக்கணக்கில் தேங்கி உள்ளது. அதிக துர்நாற்றம் வீசுவதால் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கின்றனர்.
அப்பகுதியினர் கூறியதாவது: வடிகால் கட்டுமான பணியின் போது உரிய திட்டமிடல் இல்லாததும், சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட்டனர். பஸ் ஸ்டாப் அருகே வைகை ரோட்டில் அதிகளவில் கழிவுநீர் வெளியேறி வந்தது.
இதனால் சுகாதாரம் பாதித்தது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை கற்களை வைத்து அடைத்தனர். மழை நேரங்களில் கழிவு நீர் வெளியேறி மழை நீருடன் முக்கால் அடிக்கு ரோட்டில் ஓடும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.