/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசியர்கள் போராட்டம்
/
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசியர்கள் போராட்டம்
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசியர்கள் போராட்டம்
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறைக்குள் பேராசியர்கள் போராட்டம்
ADDED : செப் 17, 2025 07:35 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு (சி.ஏ.எஸ்.,) வழங்காததை கண்டித்து அவர்கள் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் அறைக்குள் ஆறரை மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பல்கலை உதவி பேராசிரியர்களுக்கு இணை பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வு 2022 முதல் வழங்கப்படவில்லை. இதில் தகுதியுள்ள 88 பேருக்கு அதற்கான பணிகள் அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆக.,19 ல் நடந்த பைனான்ஸ் கமிட்டி கூட்டத்தில் பதவி உயர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், நிறைவேற்றப்படவில்லை எனவும் இருவேறு தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து 'மூபா' சார்பில் 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பதிவாளர் அறைக்குள் காலை 10:30 மணிக்கு சென்று அவரிடம் விளக்கம் கேட்டனர். சரியான பதில் இல்லாததால் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் சென்னையில் உள்ள கன்வீனர் சுந்தரவள்ளியிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர் அலைபேசி மூலம் மூபா நிர்வாகிகளிடம் பேசி, 'பதவி உயர்வு தொடர்பான தீர்மானம் பைனான்ஸ் கமிட்டி கூட்டத்தில் இடம் பெற்றுள்ளது' என உறுதியளித்தார். இதையடுத்து மாலை 5:00 மணி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மூபா பொதுச்செயலாளர் முனியாண்டி கூறுகையில், தீர்மானம் குறித்து கன்வீனர் அலைபேசியில் தெரிவித்தாலும் அதுதொடர்பான நகல் வழங்கவில்லை.
இதனால் சந்தேகம் உள்ளது. நாளை (செப்.,18) சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது. அப்போது கன்வீனரிடம் நேரடியாக விளக்கம் கேட்போம், என்றார்.