ADDED : ஆக 25, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக மதுரை தி.மு.க., வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
மதுரை பாரபத்தியில் த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க.,வையும், அமைச்சர்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
கட்சித் தலைவர், தி.மு.க., வுக்கு எதிராக பேசியதை கண்டிக்கும் வகையில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணியினர் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதியில் ஏராளமான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், 'வாட் ப்ரோ' 'ஓவர் ப்ரோ' அடக்கி வாசிங்க ப்ரோ' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.