/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் யூரியா தட்டுப்பாடு கவலையில் விவசாயிகள்
/
வாடிப்பட்டியில் யூரியா தட்டுப்பாடு கவலையில் விவசாயிகள்
வாடிப்பட்டியில் யூரியா தட்டுப்பாடு கவலையில் விவசாயிகள்
வாடிப்பட்டியில் யூரியா தட்டுப்பாடு கவலையில் விவசாயிகள்
ADDED : ஆக 25, 2025 02:48 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதி வைகை பெரியாறு பாசனத்தில் விவசாயிகள் முதல்போக நெல் நடவு செய்துள்ளனர். இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தனியார் உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணிகள் பாதித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் ஜெயரட்சகன் கூறியதாவது: நடவு பணிகளை தொடர்ந்து 10 நாட்களில் உரமிடப்பட்டது.தற்போது 45 நாட்களான நிலையில் யூரியா வுடன் சேர்த்து உரம் இட வேண்டும். நீரேத்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் உரக்கடைகளில் ஒரு வாரமாக யூரியா தட்டுப்பாடாக உள்ளது. உரிய பருவத்தில் யூரியா போடவில்லை என்றால் வளர்ச்சி பாதித்து விளைச்சல் குறையும். விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாடிப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறியதாவது: தற்போது யூரியா தேவை அதிகரித்துள்ளதால் பயிர் சாகுபடி பரப்புக்கு ஏற்ப உரக்கடைகள் மற்றும் வேளாண் சங்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் யூரியா சப்ளை செய்ய வேளாண் இணை இயக்குனர் 'டான்பெட்', எம்.எப்.எல் மற்றும் ஸ்பிக் நிறுவனங்களிடம் கேட்டுள்ளார். ஓரிரு நாட்களில் யூரியா வந்துவிடும் என்றார்.