/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி/// ஆக.25 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி/// ஆக.25 க்குரியது
ADDED : ஆக 25, 2025 02:48 AM
கோயில் வருஷாபிஷேக யாக விழா: வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, அபிஷேகம், அன்னதானம், காலை 9:30 முதல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை.
சந்தனக்கூடு விழாவில் கொடி இறக்கம்: கோரிப்பாளையம் தர்ஹா, மதுரை, ஏற்பாடு: தர்ஹா நிர்வாகம், பரம்பரை ஹக்தார்கள் சபை, மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 9:00, ராமக்கிருஷ்ணரின் அமுதமொழிகள், மாலை 5:45 மணி.
பள்ளி, கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி: எஸ்.ஏ.சி.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில் - மேலுார் மெயின்ரோடு, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: தொழிலதிபர் முத்து, தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், கவுரவ விருந்தினர்: கல்லுாரி தாளாளர் கணேசன், பங்கேற்பு: கல்லுாரி முதல்வர் நவநீத கிருஷ்ணன், ஏற்பாடு: பொருளாளர் கண்ணன், காலை 10:00 மணி முதல்.
துறைகளுக்கு இடையிலான விடுதலை போராட்ட வீராங்கனைகள் பற்றிய வினாடி-வினா போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை.
ஆங்கில இலக்கியத்தில் கலாசார புத்தாக்கமும், சமூக சீர்த்திருத்தமும் தேசிய கருத்தரங்கம்: மேலுார் அரசு கலை கல்லுாரி, மேலுார், சிறப்பு விருந்தினர்கள்: பனாரஸ் ஹிந்து பல்கலை உதவிப் பேராசிரியர் மாயாசங்கர் பாண்டே, மனோன்மணியம் பெ.சுந்தரனார் பல்கலை ஆங்கிலத்துறைத் தலைவர் பிரபாகரன், காலை 10:00 மணி, காளான் வளர்ப்பு பயிற்சி: பயிற்சியளிப்பவர்கள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விலங்கியல் துறைத்தலைவர் முரளி, உதவிப்பேராசிரியர் சந்திரன், காலை 10:00 மணி.
பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் பிரவீன்குமார், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி,
மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க பொன்விழா: கிருபானந்த வாரியர் சுவாமிகள் பிறந்தநாள் விழா: பூங்கா முருகன் கோயில், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்: மாநில தலைவர் செல்வராஜ், அபிஷேகம், ஆராதனை, காலை 8:00 மணி.