பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
கொட்டாம்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் நாயக்கன்பட்டி சரவணன் 51, நத்தம் டெப்போ பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மங்களாம்பட்டிக்கு பஸ்சை ஓட்டிச் சென்றார். நடத்துனர் அருள், பயணிகள் பஸ்சில் இருந்தனர். அய்யாபட்டி பகுதியில் குழாய் பதித்த மணலில் டயர் பதிந்ததால், பயணிகளிடம் இறங்குமாறு டிரைவர் கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் டிரைவர், நடத்துனரை தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். கொட்டாம்பட்டி போலீஸ் தெய்வேந்திரன் அய்யாபட்டி சிரஞ்சீவியை 29, கைது செய்தார்.
ஒரே நாளில் மூவர் தற்கொலை
திருமங்கலம்: பாண்டியன் நகரை சேர்ந்த கொத்தனார் மாரிக்கண்ணன் 40, இவரது மனைவி கவிதா 35, கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் காரணமாக மாரிக்கண்ணன் 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பாண்டியன் நகரை சேர்ந்த டெய்லர் இளவரசன் மனைவி மாரீஸ்வரி 58. உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், 2 நாட்களுக்கு முன் ஆசிட்டை குடித்துள்ளார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலியானார். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிந்துபட்டி ராஜேஷ்குமார் 28, உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

