ADDED : அக் 29, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவுப்படி கிராமசபை கூட்டம் போன்று நகராட்சி வார்டு கூட்டம் நடந்தது. ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர்.
பொதுமக்களுக்கு சந்தனம், குங்குமம், கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பான்மையோர் திருமங்கலம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

