நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிம்மக்கல் சொக்கநாதர் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு ரூ.17.49 லட்சம் பணம் அடங்கிய சாக்குமூடை காரில் இருந்து விழுந்தது.
இதைனை அவ்வழியாக வந்த செல்வமாலினி என்ற பெண் கண்டுபிடித்தார். அதில் பணம் இருப்பது தெரிய வந்ததும் போலீசில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பலரும் பாராட்டினர்.
மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன், பா.ஜ., கலை, கலாசார பிரிவு துணைத் தலைவர் வெங்கடேஷ் உட்பட பலரும் அப்பெண்ணுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

