/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் எதிர்பார்ப் பில் பயணிகள்
/
சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் எதிர்பார்ப் பில் பயணிகள்
சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் எதிர்பார்ப் பில் பயணிகள்
சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் எதிர்பார்ப் பில் பயணிகள்
ADDED : செப் 18, 2025 04:35 AM
மதுரை, ''பண்டிகை காலத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்'' என அப்பகுதி பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் மைசூருவில் இருந்துபெங்களூரு வழியாகவும்,சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்தும் தெற்கு, தென்மேற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு நடைபெறுகிறது.அதில், சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக இயக்கப்படுகிறது. இதனால் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சங்கரன்கோவில் பகுதி பயணிகள், மதுரை, விருதுநகரில் இறங்கிபஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையுள்ளது.
பயணிகள் கூறியதாவது:செங்கோட்டையில்இருந்து ராஜபாளையம், சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்களைஇயக்க வேண்டும். சென்னைக்கு பொதிகை ரயிலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. கேரளாவில் இருந்து புறப்படும் கொல்லம் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் 'சிலம்பு' ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை இல்லை. செங்கோட்டை - தாம்பரம் ரயிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரயிலும் திருநெல்வேலி வழியாக சுற்றிச் செல்கின்றன. சிலம்பு ரயில் இயக்கப்படாத நாட்களில் ராஜபாளையம், சிவகாசி, மதுரைவழியாகசென்னைக்கு கூடுதல் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவிக்க வேண்டும் என்றனர்.