sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலையால் ரூ.60 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம்; தீபாவளி விற்பனை பாதிக்கும் என மதுரை வியாபாரிகள் புலம்பல்

/

கொலையால் ரூ.60 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம்; தீபாவளி விற்பனை பாதிக்கும் என மதுரை வியாபாரிகள் புலம்பல்

கொலையால் ரூ.60 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம்; தீபாவளி விற்பனை பாதிக்கும் என மதுரை வியாபாரிகள் புலம்பல்

கொலையால் ரூ.60 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம்; தீபாவளி விற்பனை பாதிக்கும் என மதுரை வியாபாரிகள் புலம்பல்


ADDED : செப் 18, 2025 04:32 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் பார்சல் சர்வீஸ் நிறுவன பங்குதாரர் ராஜ்குமார் 52, கொலையால் சூரத்தில் இருந்து தீபாவளி விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள துணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்காமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தீபாவளி விற்பனை பாதித்துள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.

மதுரை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரும், சந்தைப்பேட்டை கல்லாணை என்பவரும் இணைந்து முனிச்சாலை சி.எம்.ஆர்., ரோட்டில் 'ஆர்.கே.' என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் துவங்கினர்.

மதுரை ரெடிமேட் ஆடை வியாபாரிகள் குஜராத் மாநிலம் சூரத்தில் துணிகளை கொள்முதல் செய்து 'ஆர்.கே.' பார்சல் நிறுவனம் மூலம் மதுரைக்கு அனுப்பி எடுத்துக்கொள்வது வழக்கம். இந்நிலையில் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் செப்., 12ல் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். கல்லாணை உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது மகன் பொன்சரவணன் என்ற அகமதுவை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜ்குமார் வீட்டை டூவீலரில் கடந்த ஒருவர், கத்தியைக் காட்டி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் லாரிகள் இதற்கிடையே ராஜ்குமார் கொலையால் சூரத்தில் இருந்து 13 லாரிகளில் வந்த துணி பார்சல்கள், 3 கோடவுன்களில் உள்ள பார்சல்கள் என மொத்தம் 8 ஆயிரம் பார்சல்கள் சம்பந்தப்பட்ட 15 வியாபாரிகளிடம் ஒப்படைக்காமல் உள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக அனுப்பப்பட்ட பார்சல்களை தங்களிடம் ஒப்படைத்தால்தான் வியாபாரம் செய்ய முடியும் என ராஜ்குமார் குடும்பத்தினரிடமும், போலீசாரிடமும் வியாபாரிகள் இரு நாட்களாக முறையிட்டனர். நேற்று காலை கோடவுன்களை திறக்க முயன்றபோது கல்லாணை தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று வரை வியாபாரிகளிடம் பார்சல்களை ஒப்படைப்பதில் சிக்கல் நீடித்தது.

தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் அஷ்ரப் தயூப் கூறியதாவது:

ராஜ்குமார் கொலையானதாலும், பங்குதாரர் சிறைக்கு சென்றதாலும் கோடவுன்களை திறக்க முடியவில்லை. பார்சலை ஒப்படைக்குமாறு போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்து விட்டோம்.

ரூ.60 கோடி மதிப்புள்ள பார்சல்கள் தேங்கியுள்ளதால் தீபாவளி விற்பனை பாதித்துள்ளது. ராஜ்குமார் குடும்பத்தினர் ஒப்படைக்க முன்வந்தபோது கல்லாணை தரப்பினர் 'நாங்களும் பங்குதாரர்தானே. எங்களிடம் கேட்காமல் எப்படி கோடவுன்களை திறக்க முடியும்' எனக்கூறி தடுத்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.






      Dinamalar
      Follow us