நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மடீட்சியாவின் 51வது ஆண்டு விழா தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அசோக் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தலைவர் லட்சுமி நாராயணன் நினைவுப் பரிசு வழங்கினார்.
சிட்பி இண்டஸ்ட்ரியல் கிளினிக் ஆலோசகர்களுக்கு முன்னாள் தலைவர் சம்பத் நினைவுப்பரிசு வழங்கினார். துறை சார்ந்த கண்காட்சி தலைவர்களை துணைத் தலைவர் சந்திரசேகரன் கவுரவித்தார்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். 'தொழில்துறை சார்ந்த குடும்பத்தினரின் பார்வையும், எதிர்பார்ப்பும்' என்ற தலைப்பில் வேளாண் உணவு வர்த்தக மைய நிறுவனத் தலைவர் ரத்தினவேல் பேசினார். குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. இணைச் செயலாளர் அரவிந்த் நன்றி கூறினார். பொருளாளர் பன்சிதர் உட்பட 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.