ADDED : ஆக 24, 2025 04:08 AM

மதுரை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடந்தன.
இதில் 17 வயது மகளிர் பிரிவில் மதுரை ஓ.சி.பி.எம்., மாணவி ஹர்ஷிதா 200 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம், 4 x100, 4 x 400 மீட்டர் ரிலே பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
19 வயது பிரிவில் ஐஸ்வர்யா 200 மீட்டர், 400, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 4 x100, 4 x 400 மீட்டர் ரிலே பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
தடகளப் போட்டிகளின் மாணவிகள் பிரிவில் 74 புள்ளிகளைப் பெற்ற ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். தாளாளர் டேவிட் ஜெபராஜ், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சீஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் சியாமளா, ராஜேஷ்கண்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் பாராட்டினர்.