ADDED : ஆக 24, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா, நீரில் கரையும் தன்மை, வர்ணப்பூச்சுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சு உள்ளதா என்பது குறித்து உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், டி.எஸ்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை கரைக்கும் இடங்களான மாதரை, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.