/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இல்லாததால் காத்திருக்கு விபத்து
/
வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இல்லாததால் காத்திருக்கு விபத்து
வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இல்லாததால் காத்திருக்கு விபத்து
வேகத்தடையில் வெள்ளை வண்ணம் இல்லாததால் காத்திருக்கு விபத்து
ADDED : ஆக 31, 2025 07:48 AM
கரூர்: கரூர் தெற்கு காந்திகிராமம், சக்தி நகரில் வேகத்தடையில் வெள்ளை வண்ணம் அடிக்காததால் வாகன ஓட்டிகள் தவிக்கின் -றனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில், விபத்துகளை தடுக்க பள்ளிகள், மருத்துவமனை, சாலை சந்திப்பு, கோவில்கள் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை அமைப்ப-தற்கு முன், அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும், 10 மீட்டர் துாரத்துக்கு முன்பாக வெள்ளை பெயின்ட்டால் எச்சரிக்கை கோடு வைக்க வேண்டும். வேகத்தடை அமைக்கும்போது, 10 செ.மீ., உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. வேகத்தடை மீது வெள்ளை வண்ணம் அடிக்க வேண்டும். வேகத்தடைக்கான சரிவு துவங்கும் இடத்தில், ஒளி ரும் டிவைடர் பொருத்த வேண்டும் என, நெடுஞ்-சாலைத்துறை விதிஉள்ளது.சில சாலைகளில் மட்டுமே, விதிமுறைகள் பின்பற்றப்படுகின்-றன. உட்புற சாலை, கிளை சாலை, புறநகர் பகுதிகளில் பெரும்-பாலும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கரூர் தெற்கு காந்திகிராமம் சக்தி நகரில் தார் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வேகத்தடை அமைக்கப்பட்டுள்-ளது. வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை வண்ணம் அடிக்காதது மட்டுமின்றி, ஒளிரும் டிவைடரும் வைக்-கப்படவில்லை.
இதனால் வேகமாக வரும்போது, இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், வேகத்தடை இருப்-பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்குகின்-றன. எனவே, வேகத்தடை மீது வெள்ளை வண்ணம் அடிக்க நட-வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.