ADDED : ஆக 31, 2025 07:39 AM
சேலம்: சேலம், கருப்பூர், டால்மியா போர்டு அருகே, நேற்று அதிகா-லையில், ஓமலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, 65 வயது மதிக்கத்தக்க முதியவர், அடையாளம் தெரி-யாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி இறந்து
விட்டார். வெள்ளக்கல்பட்டி வி.ஏ.ஒ., குமார் புகார்படி, சூரமங்-கலம் போலீசார், சாலையில் உறைந்த ரத்தத்துடன் ஒட்டிக்கொண்-டிருந்த முதியவரின் உடல் பாகங்களை சேகரித்து, அப்பகுதி, 'சிசி-டிவி' கேமரா பதிவுகளை வைத்து, மோதிய வாகனத்தை அடை-யாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாய் கடித்ததில்சிறுவன் படுகாயம்
தாரமங்கலம்: தாரமங்கலம், துட்டம்பட்டி கரட்டுக்காட்டை சேர்ந்த பெரிய-சாமி மகன் லோகித், 14. அங்குள்ள அரசு பள்ளி
யில், 6ம் வகுப்பு படிக்கிறார். நேற்று அதே பகுதியில் சைக்கிள் ஓட்டி பழகிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் கடிக்க முயன்-றதில் தடுமாறி விழுந்தார். தொடர்ந்து நாய் கடித்ததில், படுகாயம் அடைந்தார். அவரை, பெற்றோர் மீட்டு, அங்குள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதலுதவி செய்து மேல் சிகிச்-சைக்கு ஓமலுார் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர்.