/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செப்., 17ல் தி.மு.க., முப்பெரும் விழா செயற்குழு கூட்டத்தில் நன்றி தீர்மானம்
/
செப்., 17ல் தி.மு.க., முப்பெரும் விழா செயற்குழு கூட்டத்தில் நன்றி தீர்மானம்
செப்., 17ல் தி.மு.க., முப்பெரும் விழா செயற்குழு கூட்டத்தில் நன்றி தீர்மானம்
செப்., 17ல் தி.மு.க., முப்பெரும் விழா செயற்குழு கூட்டத்தில் நன்றி தீர்மானம்
ADDED : ஆக 31, 2025 07:48 AM
கரூர்: கரூரில், செப்.,17ல், முப்பெரும் விழா நடத்துவது என, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.
கரூர் தி.மு.க., அலுவலகத்தில் செயற்குழு கூட்டம், முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடந்தது. மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ரா, பிறந்த நாள், தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, செப்.,17ல் ஆண்டுதோறும் கொண்டாடப்-பட்டு வருகிறது. இந்தாண்டு முப்பெரும் விழாவை, கரூரில் நடத்த வாய்ப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரி-விப்பது.அன்று கரூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. உங்க-ளுடன் ஸ்டாலின் திட்ட முகாம், முதியோர் வீடுகளுக்கு நேரடி-யாக சென்று ரேஷன் பொருள்களை வழங்கிடும் தாயுமானவர் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், நகர்ப்புற மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம் உள்பட பல்-வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தி.மு.க., ஆட்சி தொடர, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம-சுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சர-வணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செய-லர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.