/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் கண்டெடுத்த நடுகல் பாதுகாக்க வலியுறுத்தல்
/
பழையசீவரத்தில் கண்டெடுத்த நடுகல் பாதுகாக்க வலியுறுத்தல்
பழையசீவரத்தில் கண்டெடுத்த நடுகல் பாதுகாக்க வலியுறுத்தல்
பழையசீவரத்தில் கண்டெடுத்த நடுகல் பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2025 12:46 AM

வாலாஜாபாத்:பழையசீவரத்தில், 2022ல் கண்டெடுத்த நடுகல் கேட்பாரற்று உள்ளதால், அதை பாதுகாத்து பராமரிக்க வரலாற்று ஆர்வலர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் மலை கோவிலுக்கு செல்லும் பாதையின் அருகே நடுகல் ஒன் றை, 2022ல், தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வெற்றிதமிழன் என்பவரது தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.
பழந்தமிழரின் வீர மரபை போற்றும் தொன்மையான நடுகல் அதுவென்றும், அதை பாதுகாத்து பராமரிக்க அக்குழுவினர் வலியுறுத்தினர்.
தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வாளர் வெற்றிதமிழன் கூறியதாவது:
பழையசீவரத்தில் கண்டறிந்த நடுகல்லில் இரண்டு வீரர்கள் வில் மற்றும் வேட்டை கருவிகளுடன் நடந்து செல்வதை போலவும், அவர்களது தலைக்கு மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கி.மு., நான்காம் நுாற்றாண்டு முதல், நடுகற்களில் எழுத்து பொறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் எழுத்து பொறிப்புடன் கூடிய இந்த நடுக்கல் மிகவும் பழமையானதாக இருக்கக்கூடும்.
நடுகல்லில் உள்ள கோட்டு சிற்பத்தில் வீரர்கள் கையில் உள்ள ஆயுதங்களை வைத்து பார்த்தால், போர்த்திறமை மிக்கவர்களாக அவர்கள் இருப்பர் என கணிக்க முடிகிறது.
அரசர்களுக்காகவோ, மக்களுக் காகவோ வீரச் சாவை தழுவிய வீரர்களை போற்றும் வகையிலான நடுகல்லாக இது இருக்கலாம். பழையசீவரத்தில் கேட்பாரற்று கிடக்கும் இந்த நடுகல்லை வருவாய்த் துறையினர் மீட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரி, கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும் இதுவரை பயன் இல்லை.
இந்த நடுகல்லை பாதுகாத்து பராமரித்திட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.