/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளையக்கரணை ஏரிக்கரையில் 8,000 பனை விதைகள் நடவு
/
வளையக்கரணை ஏரிக்கரையில் 8,000 பனை விதைகள் நடவு
ADDED : ஆக 25, 2025 12:45 AM

ஸ்ரீபெரும்புதுார்:மத்திய துணை ராணுவ படையின், ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி மைய ராணுவ வீரர்கள், வளையக்கரணை ஏரிக்கரையில் 8,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
ஆவடி, மத்திய துணை ராணுவ படையின் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பாக, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், குன்றத்துார் ஒன்றியம், வளையக்கரணை ஊராட்சியில், ராணுவ வீரர்கள் பயிற்சி மையம், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், கிராம நிர்வாகம் மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம், குழலோசை மற்றும் நாம் வானகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 8,000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நே ற்று முன்தினம் நடந்தது .
வளையக்கரணை ஊராட்சி தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆவடி சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி., விஜய் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்று, வளையக்கரணை ஏரிக்கரையில் 8,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
இதில், எக்ஸ்னோர தொண்டு நிறுவன நிர்வாகி மோகனசுந்தர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.