sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்த டி.ஆர்.பாலு ...கண்துடைப்பு:மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்யாததால் சர்ச்சை

/

அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்த டி.ஆர்.பாலு ...கண்துடைப்பு:மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்யாததால் சர்ச்சை

அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்த டி.ஆர்.பாலு ...கண்துடைப்பு:மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்யாததால் சர்ச்சை

அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்த டி.ஆர்.பாலு ...கண்துடைப்பு:மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்யாததால் சர்ச்சை


ADDED : டிச 24, 2025 06:43 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: மத்திய அரசு திட்டங்கள் பற்றி விவாதித்து, அதிகாரிகளிடையே கேள்வி எழுப்பி, பணிகளை விரைவுபடுத்த வேண்டிய, வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தை, அரை மணி நேரத்தில் முடித்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'கூட்டம் ஒப்புக்கு நடத்தப்பட்டதா; வளர்ச்சிப் பணிகள் மீது குழுவினருக்கு அக்கறை இல்லையா' என்று, பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவராக, அந்தந்த மாவட்டத்தின் எம்.பி., செயல்படுவார். இக்குழு வாயிலாக, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்பட்ட நிதி, திட்டத்தின் தற்போதைய நிலை என, பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசித்து, பணிகளை விரைவுபடுத்துவது கூட்டத்தின் நோக்கம்.

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் போன்றவைக்கு, குழுவினரிடையே ஒப்புதல் பெறப்படும். இக்கூட்டம் மாவட்ட அளவிலான முக்கியத்துவம் வாய்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவராக, ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, தி.மு.க.,- - எம்.பி., டி.ஆர்.பாலு, ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். துணை தலைவராக காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் உள்ளார்.

தடபுடல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இக்கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரிவர நடப்பதில்லை. கடந்தாண்டு தேர்தல் முடிந்து, டி.ஆர்.பாலு எம்.பி.,யாக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடந்தாண்டு டிசம்பர், இந்தாண்டு ஏப்ரல் என, இரண்டு மாதங்கள் மட்டுமே இக்கூட்டம் நடந்துள்ளது.

ஏழு மாதங்களுக்கு பின் நேற்று கூட்டம் நடந்ததால், அதிகாரிகள் மத் தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தன.

இக்கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று, டி.ஆர்.பாலு தலைமையில், காலை 10:00 மணிக்கு துவங்கியது.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், ஒன்றிய குழு தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னேற்றம் இல்லை கூட்டம் துவங்கியவுடன், வேளாண் பயிர் காப்பீடு, குடிநீர் பிரச்னை என, ஒரு சில விவகாரங்களை மட்டும் அதிகாரிகளிடம், டி.ஆர்.பாலு கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து, வருகை பதிவேட்டில் அனைவரும் கையெழுத்திட்டனர். கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு டி.ஆர்.பாலு பறந்து சென்றார். அவரைத் தொடர்ந்து அதிகாரிகளும் இடத்தை காலி செய்தனர்.

வழக்கமாக இந்த கூட்டம் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடக்கும். கடந்த முறை நடந்த கூட்டமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்தது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, பணிகளில் முன்னேற்றம் இல்லை என்றால், அதிகாரிகளை அவர் கடிந்து கொள்வார்.

ஏழு மாதங்களுக்கு பின் கூட்டம் நடப்பதால், நிறைய கேள்வி எழும் என்பதால், அதிகாரிகள் திட்டங்கள் குறித்து தற்போது நீண்ட விளக்கம் தர ஆவணங்களோடு வந்திருந்தனர்.

ஆனால், எந்த கேள்வியும் கேட்காமல், திட்டங்களை பற்றி விரிவாக ஆராயாமல், அரை மணி நேரத்தில் அவர் புறப்பட்டு சென்றது, அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தை வெறும் அரை மணி நேரத்தில் முடித்ததால், கண்துடைப்புக்கு கூட்டம் நடந்ததா; மத்திய அரசு திட்டம்தானே என, குழுவினர் அலட்சியம் காட்டுகிறார்களா என, அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

தமிழகத்தில் மத்திய அரசு, 100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை கண்காணித்து வேகப்படுத்த வேண்டிய குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு விரைவாக கூட்டத்தை முடித்துச் சென்றது, 'நாங்கள் கூட்டத்தை முடித்துவிட்டோம்' என, கணக்கு காட்டும் செயல். இதற்கு, பா.ஜ., சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதுதான் திராவிட மாடல் அரசின் அங்கமா என்ற கேள்வி எழுகிறது. சட்டசபை தேர்தல் வர உள்ளதால், அதிகாரிகளை கேள்வி எழுப்பாமல், எம்.பி., சென்று விட்டாரா என தெரியவில்லை. கூட்டத்தின் முக்கியத்தும் குழுவினருக்கே தெரியவில்லை.
- உ.ஜெகதீசன், பா.ஜ., மாவட்ட தலைவர், காஞ்சிபுரம்.








      Dinamalar
      Follow us