/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
/
வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
வேர்க்கடலை பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
ADDED : டிச 24, 2025 06:41 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில், வேர்க்கடலை விதையிட்ட நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நிலங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழைக்கு பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளது.
இதனால், ஏராளமான விவசாயிகள் நெல் பயிருக்கு மாற்றாக குறைவான பாசனம் கொண்டவேர்க்கடலை போன்ற தானிய வகை பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம், குண்ணவாக்கம், அமராவதிபட்டினம், ஆனம்பாக்கம், பழவேரி, அருங்குன்றம், பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில், புன்செய் நிலங்களில் விவசாயிகள் கார்த்திகை மாத பட்டத்திற்கு வேர்க்கடலை விதையிட்டு வருகின்றனர்.
இவ்வாறு வேர்க்கடலை பயிரிடும் விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
காட்டுப்பன்றிகளின் கூர்மையான மூக்கால் நிலங்களை கிளறுவதால் விதையிட்ட வேர்க்கடலை முளைப்பு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஏக்கருக்கு 30,000 ரூபாய் செலவு செய்து வேர்க்கடலை பயிர் செய்வதாகவும், அவை காட்டுப் பன்றிகளால் நாசமா வதாகவும் விவசாயிகள் பலரும் புலம்பி வருகின்றனர்.
சாகுபடி நிலங்களை தொடர்ந்து நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயத்தை பெரிதும் பாதித்து வருவதாக உத்திரமேரூர் ஒன்றிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

