/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறித்து தகவல் இல்லை மக்கள் பங்கேற்க முடியாத நிலை

ADDED : டிச 24, 2025 06:40 AM
காஞ்சிபுரம்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பற்றி எந்த தகவலும் வெளியிடாததால், இக்கூட்டத்தில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல், சேவை குறைபாடு, வினியோகஸ்தர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான புகார் என, பல்வேறு பிரச்னைகள் பற்றி இக்கூட்டத்தில் நேரடியாக தெரிவிக்க முடியும்.
ஆயுர் கார்ப்பரேஷன் சார்பில், நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இக்கூட்டத்தில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று, நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
ஆனால், இக்கூட்டம் என்றைக்கு நடைபெறுகிறது என்ற எந்த தகவல்களும், மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் தெரிவிப்பதில்லை. இதனால், அப்பகுதியில் வசிப்போர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போகிறது.
அதிகாரிகள், நுகர்வோர் சங்கங்கள் சிலவற்றுக்கு மட்டுமே போனில் தகவல் தெரிவித்து, இக்கூட்டத்தை கண்துடைப்பாக நடத்துவதாக புகார் எழுகிறது.
அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்கும் வகையில், முந்தைய ஆண்டுகளில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.
எரிவாயு சிலிண்டர் பற்றிய புகார்களை நேரடியாக தெரிவிக்க, இக்கூட்டம் நடைபெறும் நாள் விபரத்தை, வழங்கல் துறை அதிகாரிகள் முன் கூட்டியே தெரிவிக்க, எரிவாயு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.