/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'புரோட்டான்' சிகிச்சை முறை காஞ்சியில் கருத்தரங்கம்
/
'புரோட்டான்' சிகிச்சை முறை காஞ்சியில் கருத்தரங்கம்
'புரோட்டான்' சிகிச்சை முறை காஞ்சியில் கருத்தரங்கம்
'புரோட்டான்' சிகிச்சை முறை காஞ்சியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 25, 2025 12:32 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் 'ப்ரோட்டான்' சிகிச்சை முறை குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை மற்றும் அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மருத்துவமனை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, சங்க தலைவர் மருத்துவர் ரவி தலைமை வகித்தார்.
சங்க செயலர் மருத்துவர் முத்துகுமரன், நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் தண்யகுமார், பொருளாளர் மருத்துவர் ஞானவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் ஆஷு அபிஷேக் மூளை, மார்பகம், குடல் மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் புரோட்டான் சிகிச்சை முறை குறித்தும், மருத்துவர் பாலமுருகன் ரோபோட் மூலம் செய்யப்படும் அறுவை சி கிச்சை குறித்து கருத்தரங்க உரையாற்றினர்.
அண்மையில் காலமான மருத்துவர்களை, சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் மனோகரன், துணை புரவலர் மருத்துவர் விக்டோரியா ஆகியோர் நினைவு கூர்ந்தனர். காஞ்சிபுரம் கலெக்டரிடம் சிறந்த மருத்துவ சேவை புரிந்ததற்கான விருது வாங்கிய மருத்துவர் மகாலட்சுமி கவுரவிக்கப்பட்டார். இதில், 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.