/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசை
/
முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசை
ADDED : ஆக 25, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:படுநெல்லி அருந்ததியர் பாளையம் கிராமத்தில், ஆவணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று, காலை 10:00 மணி அளவில் கரகப் புறப்பாடு மற்றும் அலகு குத்திய பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
மதியம் 1:00 மணி அளவில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, மதியம் 1:45 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு மலர் அலங்காரத்தில், முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.